போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

65பார்த்தது
அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் எம் பி ஜி. செல்வம் பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி மற்றும் வாலிபால் போட்டி ஒன்றிய கழக செயலாளர் ஜீ. தம்பு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடந்த ஒரு மாதங்களாக நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 அணிகள் பங்கேற்று விளையாடின அதில் முதல் இடத்தினை பிடித்த ஆலப்பாக்கம் அணிக்கு ரூபாய் 20000, இரண்டாவது இடத்தினை கிளியாநகர் அணிக்கு ரூபாய் 10, 000 வழங்கப்பட்டது. மேலும் தொடர் நாயகன், தொடர் ஆட்டநாயகன் கோப்பைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டது. இதனை சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், மாவட்ட கவுன்சிலர் மாலதி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பை மற்றும் ஊக்கப் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் நாராயணன், மாவட்ட நிர்வாகிகள் கலியுக கண்ணதாசன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி