நெடுஞ்சாலையோரங்களில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் அமைக்கப்பட்ட விளம்பர பதாகைகளால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து, விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அதிக எடையுள்ள ராட்சத விளம்பர பதாகை உடைந்து, அந்தரத்தில் அங்கும், இங்குமாக அசைவதால், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையில், அந்தரத்தில் உடைந்து தொங்கும் ராட்சத விளம்பர பதாகையால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, உயிர்ச்சேதம் ஏற்படும் முன், சாலையோரம் உடைந்து தொங்கும் ராட்சத விளம்ப பதாகையை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.