நெல் உலர்த்தும் களமான சாலை; நெடுங்கலில் விபத்து அபாயம்

77பார்த்தது
நெல் உலர்த்தும் களமான சாலை; நெடுங்கலில் விபத்து அபாயம்
அச்சிறுபாக்கம் அருகே நெடுங்கல் ஊராட்சி அமைந்துள்ளது.

இப்பகுதியில் ஏரி, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு பாசனம் வாயிலாக, 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில், நெல், மணிலா மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை, விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொழுப்பேடு - ஒரத்தி வழியாக, வந்தவாசி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, மின்னல் சித்தாமூர் வழியாக நெடுங்கல் ஊராட்சிக்கு செல்லும் சாலையில், நெடுங்கல் ஏரி உபரி நீர் செல்லும் கால்வாய் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மீது, விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்கள் மற்றும் கேழ்வரகு போன்றவற்றை கொட்டி உலர்த்துகின்றனர்.

இரவு நேரங்களில் கருப்பு வண்ண தார்ப்பாய் கொண்டு மூடி விட்டு செல்வதால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், கூடுதலாக நெடுங்கல் பகுதியில் நெற்களம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி