செங்கல்பட்டு மாவட்டம்
நல்லம்பாக்கம் - கீரப்பாக்கம் இடையிலான வனப்பகுதியில் உள்ள 2 கி. மீ. , சாலை அமைக்க, 5. 50 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
இப்பணிக்கு, கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி டெண்டர் விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சாலை அமைக்கும் பணியை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று துவக்கி வைத்தார்.
கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு தி. மு. க. , - எம். எல். ஏ. , வரலட்சுமி, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் செல்வக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.