மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி

70பார்த்தது
எம்ஜிஆரின் பிறந்தநாளை ஒட்டி மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாமண்டூர் பகுதியில் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு போட்டி துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்களின் தலைமையில் நடந்த இந்த மாபெரும் விளையாட்டுப் போட்டியில் விளையாட்டு வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுராந்தகம் ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் குமரவேல் அப்பாதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டில் 10 கிரிக்கெட் குழுவினர் போட்டியிடும் நிலையில் இறுதியில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு எம். ஜி. ஆர் பிறந்தநாளன்று கோப்பைகள் சட்டமன்ற உறுப்பினரால் வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி