ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்; நிலத்தடி நீர் பாதிப்பு

62பார்த்தது
ஏரியில் கொட்டப்படும் குப்பை கழிவுகள்; நிலத்தடி நீர் பாதிப்பு
திருப்போரூர் - -செங்கல்பட்டு நெடுஞ்சாலையோரம், 50 ஏக்கர் பரப்பில் விரால்பாக்கம் ஏரி உள்ளது. இதன் வாயிலாக, 50 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த ஏரி அருகே குடியிருப்பு பகுதிகள், மதுபான கடை, வணிக கடைகள், இறைச்சி கடைகள், உணவகங்கள் உள்ளன.

ஏரி பகுதியில், மர்ம நபர்கள் இரவு நேரங்களில் இறைச்சிக் கழிவுகள், உணவக கழிவுகள், பிளாஸ்டிக் போன்ற குப்பையை கொட்டி செல்கின்றனர்.

ஏரியில் கொட்டிய குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகள் நீரில் மிதந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஏரி நீர் மாசுபடுவதுடன், சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது.

மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. சாலையை கடக்கும் பேருந்து பயணியர், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உடனடியாக குப்பையை அகற்றவும், மீண்டும் அப்பகுதிகளில் குப்பை கொட்டாதவாறு கண்காணிக்கவும் வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி