விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

59பார்த்தது
மாணவர்களை கைதட்ட சொல்லாதீர்கள் அது நினைவாற்றலை தடுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் திருப்போரூர் எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி ஆசிரியர்களுக்கு கோரிக்கை.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2023, 24ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியை சூரியகலா தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி கலந்து கொண்டு மாணவ மாணவியரிடையே சிறப்புரையாற்றி விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார் அதனைத் தொடர்ந்து சாரண சாரணிய மாணவியரிடம் நெகிழியை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துணிப்பையை வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய எம் எல் ஏ எஸ் எஸ் பாலாஜி சிறப்பு அழைப்பாளர்கள் பேசும்போது மாணவர்களை கைதட்ட சொல்லாதீர்கள் என ஆசிரியர் பெருமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி