காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு ஆவேசம்

84பார்த்தது
காஞ்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு ஆவேசம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில், வரும் 29ம் தேதி, மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. நிலைக்குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்து கமிஷனர் செந்தில்முருகனிடம் வழங்கிய கடிதம் ஏற்கப்படவில்லை.

மீண்டும் மேயரிடம் வழங்க வேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்ததால் கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

அதேபோல, கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்கவில்லை. மாநகராட்சி வருகை பதிவேட்டில், கவுன்சிலர்கள் வரவில்லை என அதிகாரிகள் எழுதினர். பதிவேட்டில் புறக்கணிப்பு என எழுத வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

இந்த பிரச்னைகளை முன்வைத்து, கமிஷனர் செந்தில்முருகனை நேற்று முன்தினம் தி. மு. க. , - அதிருப்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள், அவரது அறையில் முற்றுகையிட்டனர்.

கமிஷனருடன், கவுன்சிலர்கள் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி வளாகத்தில், பந்தல் போட்டு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு முழுதும் மாநகராட்சி வளாகத்திலேயே கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர். இரண்டாம் நாளாக நேற்றும் தர்ணா போராட்டம் தொடர்ந்தது.

தொடர்புடைய செய்தி