இடிந்து விழும் நிலையில் உள்ள முட்டுக்காடு மேல்நிலை தொட்டி

61பார்த்தது
இடிந்து விழும் நிலையில் உள்ள முட்டுக்காடு மேல்நிலை தொட்டி
செய்யூர் அருகே, இடைக்கழிநாடு பேரூராட்சி, ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட முட்டுக்காடு கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசுப்பள்ளி அருகே, அப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டு களுக்கு முன், 30, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக, மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலைத் தேக்கத் தொட்டி முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. மேல்நிலைத் தேக்கத் தொட்டியை தாங்கி நிற்கும் துாண்கள் விரிசல் அடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புதிய மேல்நிலைத் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் அல்லது தற்போது உள்ள மேல்நிலைத் தேக்கத் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல முறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலையில் இருந்தால், விரைவில் மேல்நிலைத் தேக்கத்தொட்டி இடிந்து, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மேல்நிலைத் தேக்கத் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி