மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவர் பலி

82பார்த்தது
மரத்தில் இருந்து கீழே விழுந்த முதியவர் பலி
அச்சிறுபாக்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 65.
கடந்த நான்கு தினங்களுக்கு முன், அவரின் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் ஏறி, புளி பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், அவருக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உறவினர்கள் உடனடியாக மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த அச்சிறுபாக்கம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி