2 மாதங்களுக்கு பின் மக்கள் குறைதீர் கூட்டம் துவக்கம்

51பார்த்தது
2 மாதங்களுக்கு பின் மக்கள் குறைதீர் கூட்டம் துவக்கம்
லோக்சபா தேர்தல் கடந்த மார்ச் 16ல், அறிவிக்கப்பட்டது. அன்றைய நாள் முதல், கடந்த வியாழக்கிழமை வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தன. இதனால், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்ற கூட்டங்கள் நடைபெறாமல் இருந்தன.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததால், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், திங்கட்கிழமையான நேற்று, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம், நடந்தது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 339 பேர், தங்களது கோரிக்கை, புகார் மனுக்களை கலெக்டர் கலைச்செல்வியிடம் வழங்கினர்.

மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி