வியாபாரிகள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

65பார்த்தது
பொங்கல் திருநாளைத் தொடர்ந்து புதுப்பட்டினம் பகுதியில் தூய்மை பணி செய்து வரும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் புதுப்பட்டினம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது.


பொங்கல் திருநாளை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் பகுதியில் சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் புதுப்பட்டினம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் சமபந்தி விருந்து மாற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று புதுப்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்க தலைவர் காதர் உசேன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் பிரபாகரன் மாநில துணை செயலாளர் அப்துல் சமது மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் இதனைத் தொடர்ந்து அனைத்து வியாபாரிகள் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி