632 சாலை சீரமைப்பு பணி ரூ. 72 கோடியில் விறுவிறுப்பு

59பார்த்தது
632 சாலை சீரமைப்பு பணி ரூ. 72 கோடியில் விறுவிறுப்பு
இ. சி. ஆர். , மற்றும் ஓ. எம். ஆர். , பகுதியை உள்ளடக்கிய சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 192 முதல் 200 வரை வார்டுகள் உள்ளன. இதில், 2, 000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.


குடிநீர், கழிவுநீர், எரிவாயு குழாய் பதிப்பு, மின்கேபிள் பதிப்பு போன்ற பணிகளால், சாலைகள் மோசமாக உள்ளன. மேலும், சீரமைத்து மூன்று ஆண்டுக்கு ஆன சாலைகள், மழையால் சேதமடைந்த சாலைகள் என, 114 கி. மீ. , துாரத்தில், 632 சாலைகள் புதுப்பிக்க வேண்டி இருந்தன.

இதற்காக, மாநில நிதித்திட்டம், தமிழ்நாடு நகர்புற சாலை கட்டமைப்பு நிதி உதவி திட்டம், நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் சிங்கார சென்னை ஆகிய திட்டங்களின் கீழ், 72 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இதில், பழைய சாலையை சுரண்டி எடுத்து, தார் மற்றும் சிமென்ட் சாலை போடப்படுகிறது. எட்டு ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, இப்பணிகள் நடக்கின்றன.

அனைத்து ஒப்பந்த நிறுவனங்களும், மார்ச் 15ம் தேதிக்குள் பணியை துவங்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால், சாலை பணிகள் வேகம் எடுத்துள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி