சாலை விபத்தில் இளைஞர் பலி
By Rajasekar 78பார்த்ததுகாஞ்சிபுரம் அடுத்த, முசரவாக்கம் காலனி பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ், 25.
இவர், கபடி போட்டி பார்க்க, இருசக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் மாலை, முசரவாக்கம் - மேல்ஒட்டிவாக்கம் நோக்கி சென்றுள்ளார்.
அப்போது, சாலையில் நிலை தடுமாறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவரது சகோதரர் அவினாஷ், பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் அளித்துள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.