"பவுஞ்சூர் டாஸ்மாக் எதிரே இருசக்கர வாகனம் ஆட்டை

54பார்த்தது
"பவுஞ்சூர் டாஸ்மாக் எதிரே இருசக்கர வாகனம் ஆட்டை
பவுஞ்சூர் அருகே திருவாத்துார் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் 51. விவசாயி.

நேற்று முன்தினம் இரவு 7: 00 மணிக்கு, பவுஞ்சூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு, தன் 'பேஷன் ப்ரோ' இருசக்கர வாகனத்தில் சென்றார்.

இருசக்கர வாகனத்தை கடைக்கு எதிரே நிறுத்திவிட்டு, மது வாங்கிக் கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, வெளியே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது.

அதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து அணைக்கட்டு காவல் நிலையத்தில், ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி