நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி: சிலைகள், நுழைவாயில் வளைவு அகற்றம்

82பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை, நான்குவழிப் பாதையாக மேம்படுத்தப்படுகிறது. சாலை விரிவாக்கத்திற்கு தேவைப்படும் தனியார், அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், சாலை விரிவாக்கத்திற்காக, நுழைவாயில் வளைவு இடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, கல்பாக்கம் அடுத்த குன்னத்துார் பகுதியில், அன்னை இளைஞர்கள் நற்பணி இயக்கத்தினர் அமைத்திருந்த திருவள்ளுவர், கண்ணகி ஆகியோர் சுதை சிலைகள், நுழைவாயில் அலங்கார வளைவு ஆகியவற்றை இடிக்க முடிவெடுத்தனர். ஆண்டுதோறும் சிலைகள் உள்ள பகுதியில், பொங்கல் விழா நடத்தி கொண்டாடுவதாகவும், சிலைகள், அலங்கார வளைவை அகற்றக்கூடாது என்றும், இயக்கம் சார்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் முறையிடப்பட்டது.

ஆனால், சாலை விரிவாக்கத்திற்கு, சிலைகள் உள்ள பகுதியின் தேவை குறித்து விளக்கி, அவற்றை தற்போது இடித்து அகற்றினர். அவற்றை வேறிடத்தில், சாலை நிர்வாகமே அமைக்க வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என, இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி