மாமல்லை பாலத்தின் பக்கவாட்டில் பயணியரை கவர புற்கள் நடவு

79பார்த்தது
மாமல்லை பாலத்தின் பக்கவாட்டில் பயணியரை கவர புற்கள் நடவு
மாமல்லபுரத்தில் உள்ள பகிங்ஹாம் கால்வாயில், திருக்கழுக்குன்றம் சாலை குறுக்கிடுகிறது. நெடுஞ்சாலைத் துறை சார்பில், கடந்த 2019ல் இக்கால்வாயில் புதிய பாலம் அமைத்து, வாகன பயன்பாட்டிற்கு விடப்பட்டது.


இந்த பாலங்களின் இருபுற பக்கவாட்டிலும், தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால், புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் நடத்தப்படும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பிரமுகர் வருகையின்போது, இந்த முட்புதர் அகற்றப்படுகிறது.

அதன்பின், மீண்டும் முட்புதர் சூழ்ந்து, பாலத்திலும் நீண்டு, இருசக்கர வாகன பயணியருக்கு இடையூறாக மாறுகிறது. தற்போது, முக்கிய நிகழ்வுகள் அதிகரிப்பதோடு, பிரமுகர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை, பாலங்களில் சூழ்ந்த புதரை முற்றிலும் அகற்றியது. அதன்பின், பாலத்தின் மேற்கு நுழைவு பகுதியில் மண் சரிவை தடுக்க, குறிப்பிட்ட நீளத்திற்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.

இதையடுத்து, பக்கவாட்டு பகுதியில் ஏரி மண் நிரப்பப்பட்டது. அதில், முட்புதர் மீண்டும் சூழாமல் தவிர்க்கவும், பயணியரை கவரவும், புல்வெளி புற்கள் நடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி