அரசு பள்ளியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டும் பெற்றோர்கள்

80பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய வெங்கப்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதால் சுற்றுப்புற கிராம மக்கள் தங்களது பிள்ளைகளை இப்பள்ளியில் ஆர்வமுடன் சேர்த்து வருகின்றனர் குறிப்பாக கடந்த ஆண்டு 98 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் அதற்கு முன்பு மாவட்டத்திலேயே தேர்ச்சி இடத்தில் முதல் பள்ளியாக இப்பள்ளி தேர்ந்தது அதனால் இப்பள்ளியில் பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர் குறிப்பாக தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தமிழ் வழி கல்வி பயின்றால் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு செய்து வரும் நிலையில் இப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் வகுப்பறைகள் இல்லா சூழ்நிலையில் மாணவர்களை சேர்க்க முடியாமல் ஆசிரிய பெருமக்கள் அவதிப்படுகின்றனர் இது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் ஏழுமலை கூடுதல் வகுப்பறைகள் இருந்தால் அனைத்து மாணவர்களையும் சேர்த்து கல்வி கற்பிக்க முடியும் வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் நாங்கள் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தாமல் உள்ளோம் என்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரியும், மாவட்ட ஆட்சியரும் நேரில் ஆய்வு செய்து கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர ஆவணம் செய்ய வேண்டுமென பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி