செங்கல்பட்டு மாவட்டம் மணப்பாக்கம் இந்த பழைய மணப்பாக்கம் கிராமத்தில் இயங்கி வந்த ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தை கடந்த 1998ல் தேவராஜ் தலைவராக இருந்தபோது இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட ஊராட்சிமன்ற அலுவலகம் வேறு எந்த இடத்திலும் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய தலைவராக பொறுப் பேற்றிருக்கும். M. K. ரஞ்சித்குமார் அவர்கள் மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ஊராட்சிமன்ற அலுவலகம் கட்ட புதுமணப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கிராமநத்தம் சர்வே எண் 88/1A தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இதற்கு அரசு மூலம் ஓப்பந்தம் இடப்பட்டு அரசு நிதி ஒதுக்கிய நிலையில் ஓப்பந்தக்காரர் தாஸ் என்பவர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணியை 5 மாத காலமாகியும் துவங்க வில்லை. அவரை பணியை துவங்கவிடாமல் சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் சதி செய்து ஊராட்சிமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணியை நிறுத்தி வைத்துள்ளனர். ஆகையால் மாவட்ட ஆட்சியரான தாங்கள் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட பணியை விரைந்து துவங்கிட அவர்கள் ஆவணச்செய்ய வேண்டும் என மனப்பக்கம் ஊராட்சி பொதுமக்கள் 350 க்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் எம் கே ரஞ்சித் குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.