பரனூர் சுங்கசாவடியில் பூத் கண்ணாடியை உடைத்த ஒருவர் கைது

50பார்த்தது
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் கடந்த 16 ஆம் தேதி மனித நேய மக்கள் கட்சியினர் காலாவதியான பரனூர் சுங்கசாவடியை உடனே அகற்ற வேண்டும். கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதக கூறி சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் சுங்கசாவடியில் இருந்த மூன்று பூத்களில் இருந்த கண்ணாடியை உடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்க்கு அழைத்து செல்ல முயன்றனர். அப்போது 500-க்கும் மேற்பட்ட மனித நேய கட்சியினர் காவல்துறையினர் வாகனத்தை வழி மறித்து வாகனத்தில் இருப்பவர்களை கீழே இறக்கி விட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர். இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடரபாக பரனூர் சுங்கசாவடியில் சார்பில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் அருகே நடுவீரப்பட்டு காந்திநகர் அண்ணா தெரு பகுதியை சேர்ந்த ஜகுபர் சாதிக் என்பவரின் மகன் முகமது அசாருதீன் (30) என்பவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி