செம்பாக்கம் பகுதியில் விநாயகர் ஆலயத்தின் மகாகும்பாபிஷேக விழா

76பார்த்தது
திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விநாயகர் ஆலயம் சிதிலமடைந்த நிலையில் ஊர் பெரியோர்களால் ஆலயத்தை புனரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில், கும்பாபிஷேக விழா நேற்று (பிப்.2) காலை கணபதி ஹோமம், கோ பூஜையுடன் துவங்கியது. 

அதனைத் தொடர்ந்து இன்று (பிப்.3) காலை இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை என பல்வேறு வேள்விகள் முடிவுற்ற நிலையில், மங்கள வாத்தியம் வானவேடிக்கைகள் முழங்க யாகசாலையில் உள்ள புனித நீர் உள்ள கலசத்தை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்று கோவில் விமானத்திற்கும் மூலவர் ஸ்ரீ காசி விநாயகருக்கும் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காசி விநாயகரை தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி