செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கே தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இவர்களின் வசதிக்காக ரூபாய் 10 லட்சம் ஊராட்சி நிதியிலிருந்து, வைஃபை வசதி மற்றும் கோவளத்தை சுற்றியுள்ள முக்கிய கோயில்கள் மற்றும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கு செல்ல நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிறுத்தம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதனை கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.