பாலவாக்கம் பகுதியில் இலவச மருத்துவ முகாம்

68பார்த்தது
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் பகுதியில் ECR மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை & மெட்ஆல் டாயக்னசிஸ் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் இன்று (செப். 22 ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை ECR பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது.

இதில் இலவச பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை, இலவச கண் பரிசோதனை, இலவச இரத்த பரிசோதனை நடத்தி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர். மருத்துவ முகாமை பாலவாக்கம் கந்தசாமி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் ஒருங்கிணைத்து நடத்தியது.

தொடர்புடைய செய்தி