செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்றைய தினம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டார் அதனை தொடர்ந்து இன்று(செப்.20) மாலை நடைபெற்ற மக்களின் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பெற்றனர்.
குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, மின் இணைப்பு, பட்டா மாறுதல் பட்டா வேண்டியும் கிராம நத்தம் பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு பட்டா உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி சார் ஆட்சியர் நாராயண சர்மா கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ரமேஷ் பி டி ஒ பாஸ்கர் தாசில்தார் ராதா முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி திருக்கழுக்குன்றம் சேர்மன் ஆர்டி அரசு திருக்கழுக்குன்றம் பேரூராட்சித் தலைவர் யுவராஜ் ஒன்றிய துணைச் சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.