மதுராந்தகத்தில் தமிழக காவல்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
தமிழக காவல்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு குறித்து செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரினீத் உத்தரவின் பெயரில் நடைபெற்று வருகின்றது.
சமூக நீதி மற்றும் மத நல்லிணக்க பிரிவு துணை கண்காணிப்பாளர் நாகலிங்கம் ஆலோசனையின் பெயரில் காவல் உதவி ஆய்வாளர் அமுதா தலைமையில்
இன்று மதுராந்தகத்தில் இயங்கி வரும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தாளாளர் லோகராஜ் முன்னிலையில் பள்ளியின் முதல்வர் திலகவதி, துணை முதல்வர் பாஸ்கர் ஏற்பாட்டில்
தீண்டாம ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்தும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்தும் சமூகத்திற்கு எதிரான செயலில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது.
போதை சம்பந்தமான பொருட்கள் மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது அவர்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் காவல்துறை இலவச நம்பர் 100 கால் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.