அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

69பார்த்தது
அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
சென்னை புறநகர் மாவட்ட அதிமுக - பல்லாவரம் பரங்கிமலை கண்டோன்மெண்ட் நகரம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா 116வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று(செப்.19) இரவு பரங்கிமலை பட்ரோடு பகுதியில் நடைபெற்றது.

இதில் சென்னை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ கே. பி. கந்தன் தலைமையில், பல்லாவரம் பரங்கிமலை கண்டோன்மெண்ட் நகர செயலாளர் தேன்ராஜ் முன்னிலையில் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி