அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேட்டில், அரசினர் மாணவர் விடுதி அருகே அமைக்கப்பட்ட குடிநீர் மினி டேங்க் பயன்பாடின்றி உள்ளது.
தொழுப்பேடு- - சூணாம்பேடு சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகளுக்காக, ஐந்து ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறு, மின் இணைப்புடன் கூடிய குடிநீர் மினி டேங்க் அமைக்கப்பட்டது.
தற்போது, குடிநீர் தொட்டி பயன்பாடின்றி உள்ளது. சாலை ஓரம் குடிநீர் தொட்டி உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சாலையைப் பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதாக இருந்தது.
எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் மினி டேங்க்கை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.