கவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தினமும், 3, 000க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், மகப்பேறு மருத்துவ பிரிவில் போதிய அளவில் படுக்கை வசதி இல்லாததால் பிரசவித்த தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளோடு தரையில் படுத்து கிடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் தி. மு. க. , - எம். எல். ஏ. , எழிலரசன், அரசு மருத்துவமனையில், ஐந்து மாடிகளுடன் இயங்கும் மகப்பேறு மருத்துவ பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பிரசவத்திற்கு வந்த கர்ப்பிணி ஒருவர் மகப்பேறு வார்டு அருகில், கேட்பாரற்று படுத்து கிடந்தார். அவரிடம் விசாரித்த எம். எல். ஏ. , எழிலரசன், உடனடியாக பணியில் இருந்த மருத்துவரையும், செவிலியர்களையும் அழைத்து படுத்துக்கிடந்த பெண்மணிக்கு பிரசவம் பார்க்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மகப்பேறு கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் பிரசவித்த தாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளோடு படுக்கை வசதி இல்லாமல் 20க்கும் மேற்பட்டோர் தரையில் படுத்து கிடப்பதை கண்டார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த எம். எல். ஏ. , எழிலரசன், மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து, உடனடியாக படுக்கை வசதி ஏற்படுத்த உத்தரவிட்டார்.