செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

55பார்த்தது
செங்கல்பட்டில் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் அசோசியேஷன் சார்பில் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் எதிரே செங்கல்பட்டு பார் அசோசியேசன் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை தடை செய்ய வலியுறுத்தியும், புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள் செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையை மறித்து தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி