மாமல்லையில் தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அதிகரிப்பு

51பார்த்தது
மாமல்லையில் தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அதிகரிப்பு
மாமல்லபுரத்தில், தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் மழைமானி என அதிகரித்துள்ளது.

ஓரிடத்தில் வெயில், மழை, காற்றின் ஈரப்பதம், திசை உள்ளிட்ட விபரங்கள் அறிவது, மிகவும் முக்கியமானது. மாமல்லபுரத்தில், முன்பு மழையை அளவிடும் வசதி மட்டுமே இருந்தது.

பொதுப்பணித் துறையினர், அத்துறை அலுவலகம் அருகில் உள்ள சாதாரண மழைமானியில் சேகரமாகும் மழைநீர் வாயிலாக, மழை அளவை அளவிடுவர்.

இந்நிலையில், தொல்லியல் துறையினர், கடற்கரை கோவில் வளாகத்தில், வானிலை தொடர்பான பல்வேறு தரவுகளை அறியவும், தானியங்கி வானிலை நிலையத்தை, கடந்த 2021ல் அமைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் அதன் சென்னை மண்டல நிர்வாகத்தினர், அரசு கட்டடக்கலை, சிற்பக்கலை கல்லுாரி வளாகத்தில், தானியங்கி வானிலை ஆய்வு நிலையத்தை, கடந்த மார்ச் மாதம் அமைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி