தொன்னாடு கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்க வலியுறுத்தல்

64பார்த்தது
தொன்னாடு கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்க வலியுறுத்தல்
சித்தாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 5, 000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.

அதிகபடியாக நெல் பயிரிடப்படும் சித்தாமூர் பகுதிகளில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வாயிலாக, தொன்னாடு ஊராட்சியில், 62. 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த பிப். , மாதம் துவங்கப்பட்டது.

சம்பா பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், போதிய நெல் வரவு இல்லாததால், கடந்த மாதம் அந்த நெல் கொள்முதல் நிலையம் நிறுத்தப்பட்டது.

கோடையில் பெய்த தொடர் மழையால், மே மாதம் பயிரிடப்பட்ட நெல், அதிக அளவில் விளைச்சல் தந்து, தற்போது அறுவடை துவங்கி உள்ளது.

ஆனால், நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் உள்ளதால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க, விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

நெல்லை பாதுகாக்க இடவசதி இல்லாத விவசாயிகள், தங்கள் நெல்லை விற்பனை செய்ய, தனியார் நெல் வியாபாரிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி