மாமல்லைக்கு 'ஏசி' பஸ் இயக்க சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு

64பார்த்தது
மாமல்லைக்கு 'ஏசி' பஸ் இயக்க சுற்றுலா பயணியர் எதிர்பார்ப்பு
பல்லவர் கால சிற்பங்களை காண, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணியர் வருகின்றனர். மேலும், சென்னை - மாமல்லபுரம் இடையே உள்ள முட்டுக்காடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம், வடநெம்மேலி முதலைப் பண்ணை, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கும் செல்கின்றனர்.

திருவான்மியூர், தாம்பரம் ஆகிய இடங்களிலிருந்து, மாமல்லபுரத்திற்கு, மாநகர் பேருந்து இயக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கவுள்ள நிலையில், பயணியர் குடும்பத்துடன் படையெடுப்பர்.

தற்போதே வெயில் தகிப்பதால், காலை 10: 00 மணிக்கு பின், பயணியர் சாதாரண பேருந்தில் பயணம் செய்ய சிரமப்படுகின்றனர்.

எனவே, சுற்றுலா முக்கியத்துவம் கருதி, பிராட்வே, அடையாறு, கோயம்பேடு, தி. நகர், தாம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்து, மாமல்லபுரத்திற்கு, வார இறுதி நாட்களில், குளிர்சாதன பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி