"புறநகரில் தொடர் 'டூ - வீலர்' திருட்டு வாலிபர் கைது"

1549பார்த்தது
"புறநகரில் தொடர் 'டூ - வீலர்' திருட்டு வாலிபர் கைது"
அனுமந்தபுரம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக 'ஹோண்டா' டியோ இருசக்கர வாகனத்தில் வந்த நபர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.

அந்த இளைஞரை மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த கரசங்கால் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், 23, என்பது தெரிந்தது.

தாம்பரத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்துக் கொண்டே, புறநகர் பகுதிகளான மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

திருடிய வாகனத்தை, வண்டலுார் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், கார்த்திக் மீது தஞ்சாவூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில், இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

கார்த்திக்கை கைது செய்த போலீசார், அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 7 ஹோண்டா டியோ இருசக்கர வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
Job Suitcase

Jobs near you