பல்லாவரம் மேம்பாலத்தை இரு வழிப்பாதையாக்க கோரிக்கை

50பார்த்தது
பல்லாவரம் மேம்பாலத்தை இரு வழிப்பாதையாக்க கோரிக்கை
பல்லாவரத்தில், ஜி. எஸ். டி. , -- குன்றத்துார் சாலைகள் சந்திப்பை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, அந்த சந்திப்பில், ‛பீக் ஹவர்' நேரத்தில், கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு தீர்வாக, பல்லாவரத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இருபாதைகள் கொண்ட, ஒரு வழி மேம்பாலமா இது அமைந்துள்ளது. அதன்படி, குரோம்பேட்டையில் இருந்து சென்னைக்கு செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி, பாதுகாப்பு துறை குடியிருப்பு அருகே இறங்க வேண்டும். அதேநேரத்தில், கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல், ஜி. எஸ். டி. , சாலை வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. அப்படி இருந்தும், நெரிசல் குறையவில்லை. வழக்கம் போல், ‛பீக் ஹவர்' நேரத்தில், வாகனங்கள், நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதற்கு தீர்வாக, கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி, இறங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டும், மேம்பாலத்தை பயன்படுத்தவும், கனரக வாகனங்கள் வழக்கம் போல் ஜி. எஸ். டி. , சாலையில் செல்லும் வகையிலும் மாற்றினால், போக்குவரத்து நெரிசல் மேலும் குறையும் என, கருதப்படுகிறது. நெடுஞ்சாலைத் துறையினரும், போக்குவரத்து போலீசாரும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி