பொதுக் கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா பொதுமக்கள் கோரிக்கை

85பார்த்தது
பொதுக் கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பஜார் பகுதியில், 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இங்கு, வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், வங்கி மற்றும் அப்பகுதியில் செயல்படும் கடைகளுக்கு என, நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

பொதுக் கழிப்பறை இல்லாததால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், 2022 - 23ம் ஆண்டு, 15வது நிதிக்குழு மானிய ஊராட்சி நிதியில் இருந்து, 5. 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாய சுகாதார கழிப்பறை கட்டப்பட்டு, செயல்படுத்தப்படாமல் உள்ளது.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சமுதாய சுகாதார கழிப்பறையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடை வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி