அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை பிரிவில் ஒரு மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் கடும் அவதி.!!
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செங்கல்பட்டு மட்டுமின்றி காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிட வளாகத்தில் உள்ள காய்ச்சல் சிகிச்சை பிரிவில் சுமார் 70க்கும் மேற்ப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காய்ச்சல் பிரிவில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 70க்கும் மேற்பட்ட நோயாளிகள் மின்விசிறிகள் இயங்காததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.