செங்கல்பட்டில் புகையை கக்கியவாரே சென்ற அரசு பேருந்தின் வீடியோ இணையத்தில் வைரல்.!!
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் குறித்து பல்வேறு விதமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அரசு பேருந்துகளின் படிக்கட்டுகள் கழண்டு விழுவதும் முன்பக்க சக்கரங்கள் கழண்டு விழுவதும் மழைக் காலங்களில் பேருந்து கூரைகளில் இருந்து தண்ணீர் கசிவதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கல்பாக்கம் பகுதியில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்ற தடம் எண் 108 கொண்ட விழுப்புரம் கோட்ட அரசு பேருந்தில் அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.
அரசு பேருந்தை முறையாக பராமரிக்காததால் இந்த புகை வெளியேறுகிறது அதிகரிக்கும் கொசுவை விரட்டும் வகையில், கொசு மருந்து அடிக்கும் வாகனம்போல புகையை கக்கியபடி செல்லும், ஆனால் செங்கல்பட்டில் அரசுப் பேருந்து ஒன்று கொசு மருந்து புகையடிப்பது போல புகையை கக்கியபடி சென்ற சம்பவம் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.!! இதனை சக வாகன ஓட்டி ஒருவர் "அரசு பேருந்தா? இல்லை அரசு கொசு வண்டியா" என நகைச்சுவையோடு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.!!