மழையால் பல ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு விவசாயிகள் சோகம்

75பார்த்தது
மழையால் பல ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு விவசாயிகள் சோகம்
உத்திரமேரூர் வட்டாரத்தில் மொத்த நிலப்பரப்பில், 70 சதவீதம் விவசாய நிலங்களை உள்ளடக்கியது. இங்குள்ள விவசாயிகள் ஏரி பாசனம், கிணற்று பாசனம், ஆற்றுப் பாசனம் மூலம் நவரை, சம்பா, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும் பெரும்பாலும் நெல் பயிரிடுவது வழக்கம.

உத்திரமேரூர் வட்டாரத்தில், கடந்த நவரை பட்டத்திற்கு 27, 000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து, சொர்ணவாரி பருவத்திற்கு, கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை, 8, 800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது, நெற்பயிரில் கதிர் வந்த நிலையில், ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், மாலை மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், உத்திரமேரூர் வட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நிலங்களில் சாய்ந்து சேதமாகி உள்ளது.

அரும்புலியூர், சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, களியப்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி