அணுசக்தி துறை வேலை வாய்ப்புகள் தேர்தல் தொடரும் வாக்குறுதி

68பார்த்தது
அணுசக்தி துறை வேலை வாய்ப்புகள் தேர்தல் தொடரும் வாக்குறுதி
கல்பாக்கத்தில், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம், பாவினி அணுமின் நிறுவனம் உள்ளிட்ட அணுசக்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. அவற்றில் பணியாற்ற, அறிவியலாளர், பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான பணியாளர்களை, தேர்வுகள் நடத்திஅணுசக்தி துறைபணியமர்த்துகிறது.

தேர்வு அடிப்படையில், பிற மாநிலபகுதியினர் அதிகளவில் வேலை வாய்ப்புபெறுகின்றனர்.

இந்நிலையில், கல்பாக்கம் சுற்றுப்புற பகுதியினருக்கு, அணுசக்தி வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கவும், அவர்களுக்கே கடைநிலை பிரிவு வேலை வாய்ப்புகளை அளிக்கவும் வலியுறுத்துகின்றனர்.

அத்துறை வேலை வாய்ப்புகளை, தேர்வுகள் நடைமுறையில் மட்டுமே வழங்கக்கூடிய நிலையில், புதுப்பட்டினம் ஊராட்சியில் இப்பகுதியினருக்கே வழங்க வேண்டும் என, தீர்மானம் இயற்றியது சர்ச்சைக்குள்ளானது.

லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில், போட்டியிடும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும், தேர்தலில் வெற்றி பெற்றதும் அணுசக்தி துறையில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.

தற்போதைய தேர்தலிலும், தி. மு. க. , செல்வம், அ. தி. மு. க. , ராஜசேகர், பா. ம. க. , ஜோதி உள்ளிட்ட வேட்பாளர்களிடம், அதே கோரிக்கையை அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக எம். பி. , யாக இருந்த தி. மு. க. , செல்வம் உள்ளிட்டோர், மீண்டும் அதே வாக்குறுதியை இந்த தேர்தலிலும் அளித்துள்ளனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி