"தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு நீர் ஏரி நீரில் கலப்பு

78பார்த்தது
"தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு நீர் ஏரி நீரில் கலப்பு
திருப்போரூர் அடுத்த பண்டிதமேடு அருகே, ஏரி மதகு வழியாக, பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீரில், தொழிற்சாலையின் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி, அப்பகுதியை சேர்ந்த திருமலை என்பவர் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், மனு அளித்துள்ளார்.

மனுவில் அவர் கூறியிருப்பதாவது:


திருப்போரூர் வட்டம் மானாமதி, குன்னப்பட்டு, தஷ்சிணாவர்த்தி, பஞ்சந்திருத்தி, பண்டிதமேடு ஆகிய கிராமங்கள் வழியாக, மானாமதி பெரிய ஏரியிலிருந்து வெளியேறும் மதகு நீர், பண்டிதமேடு தடுப்பணையில் நின்று, பின் பகிங்ஹாம் கால்வாயில் கலந்து, கடலில் சென்றடைகிறது.

இந்த நீர், சுற்றியுள்ள 1, 000 ஏக்கர் விவசாய நிலங்களின் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதோடு கால்நடைகளுக்கும் பயன்படுகிறது.

இங்கு, 'ஜப்பான் சிட்டி' என அழைக்கப்படும், 'ஒன் ஹப் சென்னை' எனும் பெயரில் உள்ள தொழில் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து, சுத்திகரிக்கப்படாமல் வெளியேறும் ரசாயன கழிவுநீர், ஏரி மதகு நீரில் கலக்கப்படுகிறது.

இதனால், பாசனத்திற்கு செல்லும் நீரில் துர்நாற்றம் வீசுவதும், மீன்கள் இறப்பதும் தொடர்கிறது. அந்நீரில் குளிப்போர், அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

எனவே, ஏரி மதகு நீரில் கலக்கும் ரசாயன கழிவுநீரை தடுக்கவும், நீராதாரத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி