கால்வாயில் உறங்கிய நபரை குளிப்பாட்டிய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

57பார்த்தது
சார் அந்த மனசு தான் சார் கடவுள்.!!

மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கால்வாயில் உறங்கிய நபரை மீட்டு குளிப்பாட்டி மருத்துவமனையில் அனுமதித்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்


செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நெல்லிக்குப்பம் சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூடுவாஞ்சேரி பிரதான சாலையில் உள்ள கால்வாயில் சேரும் சகதியுமாக இருப்பதாக அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தார்

தகவலின் அடிப்படையில் நேரில் வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை சாக்கடையில் இருந்து மீட்டு அவரை சாலையில் அமர வைத்து குளிப்பாட்டி மேல் சிகிச்சைக்காக
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்

சேரும் சகதியுமாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை குளிப்பாட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த ஓட்டுனர் சுரேஷ் அவர்களின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது இந்த காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் விரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி