காஞ்சியில் 914 அரசு பள்ளிகளில் ஆதார் திருத்த பணிகள் துவக்கம்

73பார்த்தது
காஞ்சியில் 914 அரசு பள்ளிகளில் ஆதார் திருத்த பணிகள் துவக்கம்
தமிழக பள்ளி கல்வித்துறை வாயிலாக, இலவச புத்தகம், காலை உணவு, சீருடை, வரைபடம், பேருந்து பயண அட்டை, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கு, ஆதார் எண் அவசியமாகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆதார் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆதார் திருத்த பணிகளை, கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள சேர்மன் சாமிநாதன் முதலியார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவக்கி வைத்தார்.

இப்பணியின்போது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யப்பட உள்ளது. 5 - 7 வயதுடைய குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் பதிவு செய்யப்பட உள்ளது. 7 - 15 வயதுடைய மாணவ - மாணவியருக்கு நிலையான பயோமெட்ரிக் விபரங்கள் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட உள்ளது.

இதில், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விபரங்களும், கட்டணமின்றி திருத்தம் செய்யலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 914 பள்ளிகளில், ஆதார் திருத்த பணிகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சியின்போது, பள்ளி மாணவ - மாணவியருக்கு கலெக்டர் கலைச்செல்வி நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி