பாலாற்று குடிநீர் குழாயில் உடைப்பு குடிநீர் வீண்

80பார்த்தது
பாலாற்று குடிநீர் குழாயில் உடைப்பு குடிநீர் வீண்
சிங்கபெருமாள் கோவில் ஜி. எஸ். டி. , சாலையில், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பகுதியில், செங்கல்பட்டு மார்க்கத்தில், பூமிக்கு அடியில் கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் சிமென்ட் குழாய்கள் செல்கின்றன.

நேற்று மாலை, மேம்பால பணிகளுக்காக, இந்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக, பைப் லைன் உடைந்து, தண்ணீர் வெளியே பீறிட்டு வெளியேறியது.

தொடர்ந்து, வெள்ளம் போல சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, ஜி. எஸ். டி. , சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முழுதும் நனைந்தனர்.

பணியில் இருந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, வால்வுகளை மூடி குழாய்களில் வரும் குடிநீரை நிறுத்தினர்.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, சாலையில் தேங்கிய தண்ணீர் அகற்றப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி