சென்னை - பெங்களூருதேசிய நெடுஞ் சாலைத் துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த நான்கு வழிச் சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறு வழிச்சாலையாகவும், 18 இடங்கள் சிறு பாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள்அமைக்கும் பணி நடந்துவருகின்றன.
இந்த சாலை வழியாக, திருப்பூர், சேலம், பெங்களூரு, ஒசூர், ஆரணி, காஞ்சி புரம் ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னைக்கு விரைவு மற்றும்சாதாரண பேருந்துகள்மற்றும் கனரகலாரிகள் இயக்கப்படு கின்றன.
இதில், டிப்பர் லாரிகளில், அதிகளவில் ஜல்லி ஏற்றிக் கொண்டு தார்ப்பாய் மூடாமல் சென்னை, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிக்கு செல்கின்றன.
இதுபோன்றநேரங்களில், லாரியில் இருந்து சிந்தும் ஜல்லி கற்களால் இருசக்கர வாகன ஓட்டிகள்விபத்தில் சிக்கும்அபாயம் உள்ளது.
எனவே, ஓவர் லோடு ஏற்றி செல்லும்லாரிகளை போலீசார்முறையாக கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.