கேட் பழுதானதால் சில ரயில்கள் தாமதம் போக்குவரத்து பாதிப்பு

80பார்த்தது
மதுராந்தகம் அருகே ரயில்வே கிராசிங் கேட் பழுதானதால் சில ரயில்கள் தாமதம் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கம் to சித்தாமூர் செல்லும் சாலையில் சோத்துப்பாக்கம் பகுதியில் ரயில்வே கிராசிங் உள்ளது தொடர்ந்து இந்த ரயில்வே கிராசிங் அடிக்கடி கேட் பழுதாகி வாகனங்கள் மணி கணக்கு காத்திருந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது

இன்று மாலை ரயில்வே கிராசிங் கேட் மீது லாரி மோதியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் காத்துக் கிடந்தன

பிறகு அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக கேட்டை கயிறு கட்டி உயர்த்தி பிடித்து வாகனங்கள் செல்ல அனுமதித்தனர் மேலும் தென் மாவட்டங்கள் செல்லக்கூடிய சில ரயில்கள் சில மணி நேரம் தாமதமாக சென்றது

இப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகள் நீண்ட நாள் கோரிக்கையாக. ரயில்வே கிராசிங் உள்ள பகுதியில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி