எஸ். ஆர். எம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்ப்புநிகழ்ச்சி

65பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஹெல்த் சயின்ஸ் துறையின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தி இந்து குழுமத்தின் இயக்குனர் என். ராம் கூறுகையில், ஒருவரின் படிப்புத் துறையில் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருக்க கற்றல் அவசியம். திறன்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். நோயாளிகளுடன் பழகும் போது நல்ல நடத்தை மற்றும் பணிவையும் கொண்டிருக்க வேண்டும், இவை மிகவும் இன்றியமையாதவை என்றார்.

ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் ஜே. எஸ். என். மூர்த்தி, கூறுகையில் குணப்படுத்தும் செயல்பாட்டில் தொடர்புடைய சுகாதார அறிவியல் மற்றும் சுகாதார அறிவியலுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றார். மேலும் மருத்துவத் தொழில் அல்லது சுகாதாரப் பராமரிப்பு செயல்முறை என்பது மருத்துவர்கள் மட்டுமல்லாது, அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் மற்றும் சுகாதார அறிவியல் துறையைச் சேர்ந்த பணியாளர்களும் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

எஸ். ஆர். எம் ஐஎஸ்டி இணை வேந்தர் டாக்டர் பா. சத்தியநாராயணன், கூறுகையில் தொழில் வெற்றிக்கு ஒருவரது களத்தைப் பற்றிய நல்ல அறிவு தேவை மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு தகவல் தொடர்பு திறன் மிக அவசியம் என்றார்.

தொடர்புடைய செய்தி