தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நோட்டீஸ்

81பார்த்தது
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நோட்டீஸ்
அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்க சாவடி பகுதியில், தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதியில், ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ள நபர்களுக்கு, நெடுஞ்சாலை துறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதில்,
இந்திய தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் உள்ள, கடையை இரண்டு நாட்களில் தாங்களாகவே முன்வந்து கடையை எடுக்கவில்லை என்றால், வெள்ளிக்கிழமை அன்று காலை, தேசிய நெடுஞ்சாலை துறையினருக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரம் மூலமாக, கடை அகற்றப்படும் என அச்சரப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்க சாவடி பகுதியில், சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ள நபர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

தவறும் பட்சத்தில், நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காவல் துறை மூலமாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி