10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் விவசாயிகள் கவலை

75பார்த்தது
மதுராந்தகம் அருகே 10 நாட்களாக மின்சாரம் இல்லாததால் தண்ணீர் இன்றி நாசமாகும் நெல் பயிர்கள் கண்டுகொள்ளாத மின்சாரத்துறை கவலையில் விவசாயிகள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட காட்டு தேவாதூர் கிராமத்தில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்

தற்பொழுது விவசாயம் செய்வதற்கு போதுமான மழை பெய்து நீர் ஆதாரம் இருந்து வருகிறது

காட்டு தேவாதூர் கிராமத்தில் தாஸ் என்ற விவசாயி ஒருவர் குத்தகை நிலத்தை எடுத்து நெற்பயிர் விவசாயம் செய்து வருகிறார்


அவருடைய விவசாய நிலத்தின் அருகே உள்ள மின்மாற்றி பழுதடைந்து சுமார் பத்து நாட்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாததால் விளைநிலங்களுக்கு நீர் பாசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றார்

மின்சாரத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப்போக்காக பதில் கூறுகின்றனர் என விவசாயி வேதனையுடன் கூறுகின்றனர்

மின்மாற்றி சிமெண்ட் பூச்சிகள் முற்றிலுமாக சேதம் அடைந்து எலும்பு கூடாக காட்சியளிக்கிறது கால்நடைகளோ அல்லது விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி