ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, போந்துார் பகுதியில், நெடுஞ்சாலையோரம், மழைநீர் வடிகால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமென்ட் கான்கிரீட் கால்வாய் உடைந்து சேதமடைந்துள்ளது.
இதனால், ஒரகடம் -- ஸ்ரீபெரும்புதுார் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, நெடுஞ்சாலையோரங்களில் சேதமடைந்த மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.