வாக்காளர் கையில் மை; 10% சதவீத தள்ளுபடியுடன் பிரியாணி

1061பார்த்தது
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாக்களித்த வாக்காளர் கையில் மையை காமித்தால்
10 %சதவீத சிறப்பு தள்ளுபடியுடன் பிரியாணி.

ஆர்வமுடன் காத்திருந்து பிரியாணியை வாங்கிச் சென்ற பொதுமக்கள் . செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடையில்
பாராளுமன்ற தேர்தல் நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு மேற்கொள்வதற்கு, பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர்கள் வாக்கு அளித்து விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை காட்டினால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சாப்பிட செல்லும் போது மை விரல் காண்பித்தால் 5% விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதை வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி